Followers

Monday, February 07, 2011

தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அதற்க்கோர் குணமுண்டு!


பூமியில் உள்ள கோடானு கோடி உயிரினங்களில் மிக உன்னதமான பெருமைக்குரிய படைப்பு நம் மனித இனம். பூமி என்ற ஒரு கோளை உருவாக்கி அதில் மனிதனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மனிதனை பூமிக்கு அனுப்புகிறான் இறைவன்.

இந்த உயரிய படைப்பான மனித இனம் தன்னை விட தகுதியில் குறைந்த ஒரு எல்லைக் கல்லை எந்த அளவு மரியாதை செய்ய தயாராகி விடுகிறது என்பதைத்தான் நாம் இங்கு பார்க்கிறோம். இறைவன் அளித்துள்ள பகுத்தறிவை இந்த இடத்தில் மனிதன் அடகு வைத்து விடுகின்றான். எனது தாய் மொழியான தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட ஒருவர் தனது அறிவை அடகு வைப்பதைக் கண்டு மனம் வெம்புகிறது.

இவரைப் பார்த்து ஆத்திரப்படுவதா! சிரிப்பதா! ஆதங்கப்படுவதா! என்ன ஒரு மரியாதை பாருங்கள். தனது செருப்பைக் கூட ஒரு ஓரத்தில் வைத்து விட்டு என்ன ஒரு பவ்யமாக வணங்குகிறார். இவர் சென்ற பிறகு அந்த இடத்தில் ஒரு நாய் வந்து சிறு நீர் கழித்து விட்டு செல்லும். இறைவனை கண்ணியப்படுத்தும் முறை இதுதானா? இந்த படத்தை வெளியிட்டு தினமலர் இவரின் அறியாமையை வெளியாக்குகிறது. அதே தினமலர் இந்த கல்லுக்கு முன்னால் ஒரு பந்தலையோ ஒரு கட்டிடத்தையோ கட்டி அதற்கு ஒரு புரோகிதரையும் வைத்து சமஸ்கிரதத்தில் மந்திரங்கள் ஓத ஆரம்பித்தால் அதை ஏற்றுக் கொள்கிறது.இவரை கேலி செய்த தினமலர் அதே காரியத்தை சில மாற்றங்களுடன் செய்து வருவதை பார்க்கிறோம்.

'நீங்கள் வணங்கும் இந்த சிலைகள் என்ன? என்று ஆபிரஹாம் தனது தந்தையிடமும் தனது சமுதாயத்திடமும் கேட்டபோது 'எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்' என்று அவர்கள் கூறினர்.' -குர்ஆன் 21:52,53

'இறைவனையன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே! நீங்களும் உங்களின் முன்னோர்களும் அவற்றிற்கு பெயரிட்டீர்கள். இது குறித்து எந்த சான்றையும் இறைவன் உங்களுக்கு அருளவில்லை'-குர்ஆன் 12:40

'தேடுவோனும், தேடப்படுவோனும் பலகீனர்களாக இருக்கிறார்கள்' -குர்ஆன் 21:52,53

இந்நேரத்தில் என் முன்னோர்களை நினைத்துப் பார்க்கிறேன்.நான்கைந்து தலைமுறைக்கு முன்னால் எனது முன்னோர்களும் இதே நிலையில்தான் இருந்திருப்பார்கள். இஸ்லாம் என்ற ஒரு மார்க்கத்தில் அவர்கள் தங்களை பிணைத்துக் கொண்டதால் இன்று நானும் ஒரு சுயமரியாதைக்காரன் என்று சொல்லிக் கொள்கிறேன்.என் முன்னோர்கள் எனக்கு பெரும் சொத்துக்களை சேர்த்து வைக்கா விட்டாலும் இஸ்லாம் என்ற ஒரு உயரிய மார்க்கத்துக்கு சொந்தக்காரர்களாக்கி விட்டுச் சென்றார்களே அவர்களை நினைத்து பெருமைபடுகிறேன்.

இந்த அழகிய மார்க்கத்தில் பிறக்க வைத்த அந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்!

'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளோம். அது நிராகரிப்பவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.' -குர்ஆன் 17:41

'தமிழன் என்றோர் இனமுண்டு: தனியே அதற்கோர் குணமுண்டு' என்ற பெருமைக்குரிய நம் இனம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'நட்ட கல்லும் பேசுமோ' என்ற நமது முன்னோர்களின் கொள்கைகளை வாழ்வில் கடைபிடித்து எல்லைக் கற்க்களை எல்லாம் வணங்குவதை விட்டும் தவிர்ந்து கொள்வோமாக!

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது. -திருக்குறள்


'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'- அதர்வண வேதம் 32:3

'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'_யோவான்1:18

31 comments:

saarvaakan said...

வணக்கம் சுவன பிரியன்,

மதமோ அல்லது எதன் காரண்மாகவோ போர்களோ ஆக்கிரமிப்போ நடந்து விடக்கூடாது என்பதே நமது விருப்பம்.

இஸ்லாமிய சகோதரத்துவ கட்சிக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது.

கடந்த கால தவறுகளை அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

நாட்டில் சிறுபான்மையினர் நலம் காக்க வேண்டும்.

இஸ்லாமிய சகோரதத்துவம் மட்டுமல்லாமல் உலக் ச்கோரத்துவம் ஏற்பட முயற்சித்தால் அமைதியும் ,ஜனநாயகமும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பொறுத்து பார்க்க வேண்டும்.வருகைக்கு நன்றி நண்பரே.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.சுவனப்பிரியன்.

மிகச்சிறப்பான விழிப்புணர்வூட்டும் பதிவு.

//இந்நேரத்தில் என் முன்னோர்களை நினைத்துப்பார்க்கிறேன்.// --அல்ஹம்துலில்லாஹ். அன்னாருக்கு இறைவன் பேரருள் புரிய வேண்டுகிறேன்.

//இந்த அழகிய மார்க்கத்தில் பிறக்க வைத்த அந்த இறைவனுக்கே எல்லாப் புகழும்!//--ஆமீன்.

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

====>
நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.


.

suvanappiriyan said...

திருச்சிக்காரன்,தருமி !

முதலில் நான் இங்கு ஒன்றை தெளிவுபடுத்தி விடுகின்றேன். மொகலாயர்கள் அனைவரும் புடம் போட்ட தங்கங்கள் என்று நான் வாதிட வரவில்லை. பலரும் மது மாதுவில் கட்டுண்டு கிடந்தவர்களே! அதேபோல் 'தி கிரேட் அசோகர்' தனது உடன் பிறந்த 99 உடன் பிறப்புகளையும் வெட்டி சாய்த்து விட்டுத்தான் அரியணை ஏறினார். 'ஒளரங்கஜேப் தனது சகோதரர்களை ஏன் கொன்றார்?' என்று தருமி கேட்டால் அசோகர் எதற்காக கொன்றாரோ அதே காரணத்துக்குத்தான் ஒளரங்கஜேப்பும் தனது சகோதரர்களை கொன்றதாக சொல்ல முடியும். அதே போல் தான் அழகில்லை என்று கேலி பேசியதை பொறுக்காத அசோகர் 1000க்கு மேற்பட்ட பெண்களை கழுவில் ஏற்றிக் கொன்றதாக வரலாறு(விக்கி) சொல்கிறது. முகலாயர்கள் வந்து 800 வருடம் எவ்வாறு ஆட்சி செய்ய முடிந்தது என்பதற்கு இது போன்ற கொடுமைகளும் காரணமாக இருந்திருக்கலாம்.

அசோகருக்குப் பிறகு ஒரு பிராமண அமைச்சரின் முயற்ச்சியால் மௌரியப் பேரரசு வீழ்கிறது. அதன்பிறகு திரும்பவும் குறுநில மன்னர்களின் கைகளில் ஆட்சி செல்கிறது. இதன்பிறகுதான் பிரிந்த பாரதத்தை முகலாயர்கள் ஒன்றிணைக்கின்றனர். மொகலாயர்கள் படை எடுத்து வந்ததை குறை கண்டால் அசோகரின் தந்தை நமது தமிழ்நாடு வரை வந்து சண்டையிட்டு கொள்ளையிட்டு சென்றதையும் குறிப்பிட வேண்டும். எனவே இவை எல்லாம் அந்த கால வழக்கப்படி போர்களும் கொள்ளைகளும் சகஜமாகவே இருந்திருக்கிறது. இவ்வாறு உலக மரபு இருக்க ஒளரங்கஜேப்பை மட்டும் நமது வரலாற்று நூல்களிலிருந்து நமது இணைய பதிவர்கள் வரை தூற்றுவது எதற்காக? என்பதுதான் என் கேள்வி. அசோகர் மரங்களை நட்டார் என்றுதான் அனைத்து பாடப் புத்தகங்களிலும் பார்க்கிறோம். ஜிஸியா சரி போட்டு இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று பொய் கூறிய நமது வரலாற்றாசிரியர்கள் அசோகரையும் மற்ற இந்து மன்னர்களின் குறைகளை பாடப் புத்தகங்களில் ஏற்றாதது ஏன் என்று நான் கேட்கலாம் அல்லவா!

நிறைய பேசிவிட்டோம். இனி அடுத்த தலைப்பை தருமி பதிவில் தொடும்போது நேரமிருப்பின் வருகிறேன். நன்றி!

suvanappiriyan said...

சார்வாகன்!

முதல் வருகைக்கு நன்றி!

//இஸ்லாமிய சகோரதத்துவம் மட்டுமல்லாமல் உலக் ச்கோரத்துவம் ஏற்பட முயற்சித்தால் அமைதியும் ,ஜனநாயகமும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட வாய்ப்பு உண்டு.//

கண்டிப்பாக!இன்று இஹ்வான்களோடு போராட்டத்தில் குதித்திருப்பவர்களில் கிறித்தவர்களும் அடங்குவர். ஆப்கானியர்களைப் போல் படிப்பறிவு இல்லாதவர்கள் அல்ல எகிப்தியர்கள். நமது நாட்டில் பிராமணர்கள் எவ்வாறு படிப்பிலும் அலுவலக வேலைகளிலும் ஆர்வம் காட்டுகிறார்களோ அதுபோல் படிப்பிலும் அலுவலக உத்தியோகங்களிலும் எகிப்தியர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கும். படித்த சமூகமாக இருப்பதால் சவுதியைப் போல் இவர்களும் நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று நினைக்கிறேன். பல காலம் அடைபட்டு கிடந்த இஹ்வான்கள் தற்போதுதான் சிறையிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியாக்கப்படுகிறார்கள்.

மற்றபடி நிறைய உலக, இஸ்லாமிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இஸ்லாத்தை ஒரு சராசரி முஸ்லிமைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பல நேரங்களில் எகிப்தியர்களின் பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் பார்க்கும் போது நமது நாட்டு பிராமணர்களை பார்ப்பது போலவே தோன்றும்.

suvanappiriyan said...

உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் ஆசிக்!

வருகை புரிந்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி! விவேக் ஒரு படத்தில் காமெடியாக சொல்லப் போக அது உண்மையாகவே ஆகி விட்ட கொடுமையை என்னவென்பது!

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தை சுட்டி மூலம சொன்ன தமிழனுக்கு நன்றி!

குடுகுடுப்பை said...

அவர கல்லை வணங்கி நரகவாசியா இருந்துட்டு போவட்டும் விடுங்க பாவம்.

suvanappiriyan said...

அத எப்படிங்க விட முடியும்?

நாளை மறுமையில் இறைவனுக்கு முன்னால் 'என் இனத்தில் பிறந்து, என் மொழி பேசிய சுவனப்பிரியன் 'கல்லை வணங்காதே! அது பாவம்' என்று சொல்லாமல் விட்டு விட்டார்' என்று என் மீது வழக்கு தொடர்ந்தால்! இறைவன் என்னை கேட்க மாட்டானா? எனவே எனக்கும் ஒரு தற்காப்புக்காகத்தான்.

'நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.இறைவனை அஞ்சுங்கள். இறைவன் கடுமையாக தண்டிப்பவன்.'
-குர்ஆன் 5:2

suvanappiriyan said...

எங்கள் வீட்டில் கடந்த 20 வருடமாக ஒரு அரிஜனப் பெண்தான் வீட்டு வேலை செய்து வருகிறார். வீட்டில் சமையல் கட்டு முதல் அனைத்து இடங்களுக்கும் சுதந்திரமாக செல்ல உரிமை பெற்றவர். நாங்கள் தீண்டாமை பாராட்டுவதில்லை. எங்கள் கிராமத்தில் 90 சதவீதம அவர்களுக்கு வேலை கொடுத்தும் வருகிறோம். எனக்கு தெரிந்து கடந்த 40 வருடமாக எந்த ஒரு பிரச்னையும் வந்ததில்லை.

எங்கள் கிராமத்துக்கு பக்கத்திலேயே செட்டியார்கள் அதிகம் வசிக்கும் கிராமம் உண்டு. 'வாங்க பாய்' என்று அன்போடு எங்களிடம் பழகும் செட்டியார்கள் அரிசனங்களை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. ஒருமையில் பேசி அவர்களை கிராமத்துக்குள்ளேயே அனுமதிப்பதில்லை. என்னைக் கேட்டால் பிராமணர்களை விட அரிசனங்களிடம் அதிகம் சாதி வித்தியாசம் காட்டுவது மற்ற சாதிகள்தான் என்பேன்.

வலையுகம் said...

நண்பர் சுவனப்பிரியன் அவர்களுக்கு

அருமையான பதிவு

வாழ்த்துக்கள் நண்பரே

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ சுவனப்பிரியன்

உணரவைக்கும்,பயனுள்ள பதிவு.
நம்மை இஸ்லாமியர்களாக பிறக்கவைத்த,அல்லாஹ் என்றுமே நன்றிக்குறியவன்/

அன்புடன்
ரஜின்

குடுகுடுப்பை said...

நாளை மறுமையில் இறைவனுக்கு முன்னால்//
மறுமைன்னு ஒன்னு உண்டான்னு கேள்வி கேட்டு இல்லையென்று உணரும்போதுதான் மாற்றங்கள் வரும்.அதுவரை ...

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

அதுவரை.......

'அதுவரை..... அவர் எல்லைக் கல்லை தெய்வமாக வணங்கிக் கொண்டே இருக்கட்டும்' என்கிறீர்களா?

இறைவன் என்ற ஒருவன் உண்டு என்பதை மிகப் பெரும் அறிவியல் அறிஞர்களே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் நீங்களும் இறைவனின் படைப்பைப் பார்த்து வியந்து போகிறோம். ஆனால் அறிவியல் அறிஞர்களோ அந்த இறைவனின் படைப்புகளை நேரிடையாக ஆய்வு செய்து இத்தனை கோடான கோடி கோள்கள் பால் வெளியில் இருக்க பூமி ஒன்று மட்டுமே மனிதன் வாழ தகுதியுடையதாக இருக்கிறது.

இது இறைவன் என்ற ஒருவன் இல்லாமல் இத்தகைய முன்னேற்பாடு ஏற்பட்டே இருக்காது என்பது அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் முடிவு. எனவே இந்த நாத்திகம் என்பது இந்து மதத்தில் உள்ள சாதிகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் முடிவுக்கு கொண்டு வர பெரியாராலும் வேறு பல அறிவு ஜீவிகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

மறுமை வாழ்வு என்பது இந்து,இஸ்லாம்,கிறித்தவம் என்ற உலக மதங்கள் அனைத்திலுமே சொல்லப் பட்ட ஒன்று.
இது பற்றிய மேலதிக விபரங்களை நான் முன்பு இட்ட பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

அவர் வேறு மார்க்கத்துக்கு போகாவிட்டாலும் குறைந்தபட்சம் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் முன்னோர்களின் வார்த்தைக்காவது மதிப்பு கொடுக்கலாம் அல்லவா?

suvanappiriyan said...

வருகைபுரிந்து கருத்தைப் பதிந்த நண்பர் ஹைதர் அலி,நண்பர் ராஜின் அப்துல் ரஹ்மான் போன்றோருக்கு நன்றிகள் பல.

suvanappiriyan said...

குடுகுடுப்பை said...
//சுவனப்பிரியன்
இந்தியாவை ஒரு இந்து நாடு என்று அறிவித்து, இந்துக்களின் மத விதியில் பிச்சையிடுதல் இருக்கிறது, ஆனால் முஸ்லீம்களை கட்டாயப்படுத்தமுடியாது என்று சொல்லி அவர்கள் மீது இந்துக்களாக மாறும் வரை பிச்சை வரி விதிப்பது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒத்துக்கொள்வீர்களா?

அரசியலில் மதம் இருக்கவே கூடாது என் நிலை, ஆனால் இஸ்லாமிய ஆட்சி இறைவன் கொடுத்தது என்பது உங்கள் நிலை. அதனை விவாதத்தின் மூலம் புரியவைக்கவே மேலே உள்ளது.

சென்று பார்த்துக் கொள்ளுங்கள். //
----------------------------
முஹம்மத் ஆஷிக் said...
தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.சுவனப்பிரியன்,
நீங்கள் இன்னும் ஆயிரம் பின்னூட்டம் போட்டாலும் இன்னும் அடிப்படையையே புரிந்து கொள்வதே இல்லை அவர்கள்...

////////On Tuesday, February 08, 2011 10:52:00 PM ,
குடுகுடுப்பை said...

சுவனப்பிரியன்
இந்தியாவை ஒரு இந்து நாடு என்று அறிவித்து, இந்துக்களின் மத விதியில் பிச்சையிடுதல் இருக்கிறது, ஆனால் முஸ்லீம்களை கட்டாயப்படுத்தமுடியாது என்று சொல்லி அவர்கள் மீது இந்துக்களாக மாறும் வரை பிச்சை வரி விதிப்பது என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒத்துக்கொள்வீர்களா?//////
---இந்த பின்னூட்டமே அதற்கு சாட்சி, இதையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு அழுகை வரவில்லையா?

நான் படித்த இஸ்லாமிய பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை 'ஒழுக்கப்பயிற்சி வகுப்பு' என்று மஸ்ஜிதுக்கு அனுப்பி விடுவார்கள். அங்கே குர்ஆன், ஹதீஸ் இவற்றை சொல்லி பயான் நடக்கும். மாற்று சமய மாணவர்களுக்கு வகுப்பிலேயே பாட்டு கிளாஸ் நடக்கும்.

அதுப்போலத்தான் ஒருத்தருக்கு ஜகாத் மற்றவருக்கு ஜிஸ்யா. ஜகாத்தைவிட ஜிஸ்யா அதிகமாய் இருந்தால் மட்டுமே ஆட்சேபம் வரவேண்டும். மாறாக ஜகாத்தைவிட ஜிஸ்யா ரொம்ப ரொம்ப கம்மி.

குடுப்பைக்காரர் கேட்டகேள்விக்கு என் பதில்...

ஒத்துக்கொள்வேன்...
ஒத்துக்கொள்வேன்... ஒத்துக்கொள்வேன்...

ஏனெனில், என் சக இந்தியன் மட்டும் வரி கட்ட நான் வரி ஏய்க்கும் மோசக்காரன் ஆக மாட்டேன். ஜகாத் அளவையும் கொடுத்து அதையும் கட்டவும் தயங்க மாட்டேன். கூடவாக இருந்தாலும்..! முடியாது என்ற நிலையில் நாட்டைவிட்டு ஹிஜ்ரத் செய்து விடுவேன். இதுதான் இஸ்லாம்.

மற்றவனின் வரியில் மட்டும் அமைக்கப்பட்ட அத்தனை அரசு உள்கட்டுமானங்களையும் நானும் அனுபவித்துக்கொண்டு வரி கட்டாமல் போக இஸ்லாம் எனக்கு கற்றுத்தரவில்லை.

அவ்வளவு ஏன்...? சகோ? எந்த பாளிசியும் போடாமல், வருமானத்துக்கு அப்படியே இருபது சதவீதம் வருமான வரியும் கட்டி மேலும் இரண்டரை அல்லது அந்து அல்லது பத்து சதம் என்று ஜகாத்தும் கொடுக்கிறோமே இந்திய முஸ்லிம்கள்? இதெல்லாம் இவர்களிடம் சொன்னால் "இழிச்சவாயணுங்கன்னு சொல்லி" சிரிப்பார்கள்... நம்மைப்பார்த்து.

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்... நாம் மறுமைக்காக வாழ்வோம் சகோ. அங்கே மொத்தமாய் சேர்த்துவைத்து சிரிப்போம் இன்ஷாஅல்லாஹ்.
------------------------------
சுவனப்பிரியன் said...
ஆசிக்!

உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்! நீங்கள் சொன்னது போல் மறுமையில் சேர்த்து சிரிப்போம். கூடிய வரை அந்த சிரிப்பில் இந்த நண்பர்களையும் இணைத்துக் கொள்ள பிரார்த்திப்போம். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
12:16 PM

Anisha Yunus said...

நல்ல பதிவு பாய். ஆனால் பகுத்தறிவை சரியே உபயோகித்தால் மட்டுமே இந்த ஷிர்க்கிலிருந்து விடுபட முடியும். இன்னும் முஸ்லிம்களில் பலரே இதில் கட்டுண்டு கிடப்பதுதேன் பரிதாபம்.... அல்லாஹூ முஸ்த'ஆன்.

குடுகுடுப்பை said...

அவன் மூடத்தனமாக கல்லை வணங்குவதால் என்ன ஆயிற்று, அடுத்தவனுக்கு துன்பம் இழைக்காமல் எதை செய்தாலும் சரிதான்.கல்லை வணங்கும் இவர் மிகச்சிறந்த மனிதனாக இருக்ககூடும் அது மட்டுமே முக்கியம்.

suvanappiriyan said...

//திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.//
-நன்றி வினவு.

இந்த லட்சணத்தில் திருச்சிக்காரர் 'எங்களிடம் இப்பொழுது சாதி பாகுபாடெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை. நானே ஒரு தனி கோவில் கட்டப் போகிறேன்' என்கிறார். ஐயா....இது கோர்ட் கொடுத்த ஆணை. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

suvanappiriyan said...

சுந்தரராஜன்

இந்த வழக்கு விசாரணையின் போது நானும் அந்த நீதிமன்றத்தில் இருந்தேன்.
“நீண்ட நெடுங்காலமாக பழக்கத்தில் உள்ளதை மாற்ற முடியாது” என்று நீதிபதி கூறினார். இதே அளவுகோலை அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தினால் இந்த நீதிபதி சட்டம் படித்து நீதிபதி பணிக்கே வந்திருக்க முடியாது. வீட்டின் சமையலறையில்தான் இருந்திருக்க வேண்டும்.
பெரியார் வழிவந்தவர்களாக கூறிக்கொள்பவர்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்த தீர்ப்பும், நீதிபதியின் பார்வையும் வலியுறுத்துகிறது.
-----------------------------------
1. Badri Seshadri

மானக்கேடான விஷயம். நீதிமன்றம் வாயிலாக வழக்கை மேலே எடுத்துச் செல்வதுடன், தெருக்களிலும் இறங்கிப் போராடவேண்டும். அத்துடன் மக்கள் அனைவரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை மட்டுமல்ல, இந்த நடைமுறை உள்ள அனைத்துக் கோயில்களையும் பகிஷ்கரிக்கவேண்டும். இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பிரச்னையை எழுப்ப, சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்மீதும் அனைத்துக் கட்சிகள்மீதும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

-வினவு தளத்தில் வந்த முக்கிய பின்னூட்டங்கள்.

suvanappiriyan said...

வருகைபுரிந்து கருத்தைப் பதிந்த அன்னுவுக்கு நன்றி!

suvanappiriyan said...

குடுகுடுப்பை!

//அடுத்தவனுக்கு துன்பம் இழைக்காமல் எதை செய்தாலும் சரிதான்.கல்லை வணங்கும் இவர் மிகச்சிறந்த மனிதனாக இருக்ககூடும் அது மட்டுமே முக்கியம்.//

ஒரு பகுத்தறிவாதி இப்படி பேசலாமா? அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல பிரச்னை. அந்த கல் வணங்குவதற்கு தகுதியானதுதானா என்றுதான் கேட்கிறேன்.

அடுத்து உலகம் எவ்வாறு உண்டானது என்று அறிவியல் பூர்வமாகவும், பகுத்தறிவிலும் விளக்கும்படி கேட்டிருந்தேன். அதைக் கண்டுக்கவே இல்லையே!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சுவனப்பிரியன்...
//அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல பிரச்னை. அந்த கல் வணங்குவதற்கு தகுதியானதுதானா என்றுதான் கேட்கிறேன்.//

அதுமட்டுமில்லை சகோ.

///அவன் மூடத்தனமாக கல்லை வணங்குவதால் என்ன ஆயிற்று, அடுத்தவனுக்கு துன்பம் இழைக்காமல் எதை செய்தாலும் சரிதான்.கல்லை வணங்கும் இவர் மிகச்சிறந்த மனிதனாக இருக்ககூடும் அது மட்டுமே முக்கியம்.///--எனில் அவர் வீட்டுக்குள்ளே ஒரு கல்லை சொந்தமாக வாங்கி வைத்து வணங்கட்டுமே..?

எல்லா சமய மக்களுக்கும் சொந்தமான-பொதுவான ஒரு ஊரின் தூரத்தை கிலோமீட்டரில் காட்டும் ஒரு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான எல்லைக்கல்லை எப்படி அவர் வணங்கலாம்?

இதற்குப்பின்னால், சமுதாயத்துக்கு ஒரு பெரிய தீமை ஒளிந்து கிடப்பது தெரியவில்லையா?

சகோ.சுவனப்பிரியன் இதை நீங்கள் படம் பிடித்து வேறு போட்டுவிட்டீர்களா? தொலைஞ்சுது.

இனி என்னாகும்? அந்த கல்லை இன்னும் பலர் வணங்குவர். அக்கல்லை சுற்றி ஒருவர் சிறிதாக பானா வடிவில் சுவர் எழுப்பி கூரைபோடுவார். மறக்காமல் டால்டா டின்னில் ஒரு உண்டியல் வைப்பார். பக்தர் எண்ணிக்கை கூடும்.

பின்னர் வேறொருவர் கோவில் கட்டுவார். "எல்லைக்கல் சாமி கோவில்"-க்கு குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார். பக்தர் கூட்டம் இன்னும் பெருகும். இப்போது உண்டியல் பிரம்மானடமாய் ஆளைவிட உயரமாய் வளர்ந்து நிற்கும்.

தேசிய நெடுஞ்சாலை குறுக்கப்படும். போக்குவரத்து இடையூறு. ஆத்திகம் எனும் பேரில் பணச்சுரண்டல். நாளை இக்கோவில் யாருக்கு சொந்தம்... நெடுஞ்சாலை துறைக்கா? அல்லது அந்த இடத்தில் கோவில் கட்டியவருக்கா? அப்புறம் யார் பூசை செய்வது? யார் அறங்காவலர்?

இதனால், கோர்ட்... கேஸ்... அடி... வெட்டு... குத்து... கொலை... சாதிக்கலவரம்... மதக்கலவரம்... ஊரடங்கு உத்தரவு... இதைவைத்து ஆட்சிக்கலைப்பு, ஆட்சிப்பிடிப்பு என எல்லா பயங்கரவாதங்களும் அரங்கேறுமே சகோ.

பிறருக்கு சொந்தமில்லாத கல்லை கடவுளாக வணக்குவது சரியான செயலா?

இப்போது சொல்லுங்கள் சகோ.குடுகுடுப்பை..!

suvanappiriyan said...

திருச்சிக்காரன்!

//இந்தியாவில் நம்பிக்கையாளர்கள் அதிகமாகவும் திம்மிகள் எண்ணிக்கையில் குறைவாகவும் ஆகி விட்டால்,அப்போது இந்தியாவில் திம்மிகள் எல்லோருக்கும் மீண்டும் ஜிசியா வரி விதிக்க வேண்டும் ,200 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12 ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும், 20,000 ரூபாய் சொத்து வைத்திருக்கும் ஏழை திம்மி வருடம் 12OO ரூபாய் ஜிசியா வரி கட்ட வேண்டும் என்பதை சட்டமாக்க முயன்றால் நீங்கள் அதை எதிர்ப்பீர்களா, ஆதரிப்பீர்களா?//

நான் எதிர்ப்பேன். ஏனெனில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களின் வருமானத்துக்குத் தக்கவாறு வரி கட்டிக் கொண்டு வருகிறோம். எனவே இங்கு ஜிஸியா வரிக்கும், ஜகாத் வரிக்கும் அவசியமே இல்லை. இன்றும் கூட முஸ்லிம்கள் அரசுக்கு வரியும் கட்டிவிட்டு இஸ்லாம் செர்ன்ன ஜகாத்தையும் தனிப்பட்ட முறையில் கணக்கிட்டு கொடுத்தும் வருகிறார்கள்.

இந்த முறை முஸ்லிம்களிடம் முறையாக இன்று வரை செயல்படுவதால்தான் செல்வம் முஸ்லிம்களிடத்தில் பரவலாக இருக்கிறது. விகிதாச்சார அடிப்படையில் இஸ்லாமியர்களிடத்தில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களையும் பார்க்க முடியாது: அதே போல் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களையும் பார்ப்பது அரிது. இது ஜகாத் என்ற அமைப்பு செயல்படுவதால் வந்த நன்மை. அனைத்து இஸ்லாமியர்களையும் வருடா வருடா ஜகாத் கொடுத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்துக்கு கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம்.

suvanappiriyan said...

தருமி!

///இந்துக்களும், முஸ்லிம்களும் தங்களின் வருமானத்துக்குத் தக்கவாறு வரி கட்டிக் கொண்டு வருகிறோம்// இதுதானே சரி. கடவுளே நம்மைப் பிளவு செய்கிறாரே, இது நியாயமா, சரியா என்று திரும்ப ... கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.///

இதை இறைவன் எங்கு பிரித்தான். ஒரே மார்க்கத்தில்தான் முன்பு அனைவரும் இருந்தோம். இறைவனை புரிந்து கொள்ளாமலும், வேதங்களை மாற்றியும் விட்டதால் இந்து, கிறித்தவர்,பௌத்தர், நாத்திகர், இஸ்லாமியர் என்று பிரிந்து விட்டோம். எனவே தவறு மனிதர்களிடம்தான்.

//இஸ்லாமியர்களிடத்தில் மிகப் பெரும் கோடீஸ்வரர்களையும் பார்க்க முடியாது: அதே போல் மிகவும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களையும் பார்ப்பது அரிது. //

இது உண்மையாகத் தெரியவில்லை.//

நான் தமிழகத்தை உதாரணமாக காட்டவில்லை. முழு உலக நாடுகளையும் கணக்கெடுத்து பாருங்கள். சவுதியில் பொருளாதாரம் அனைவரிடத்திலும் ஓரளவு சமப்படுத்த்பட்டிருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை முஸ்லிம்கள் செய்தது தவறு. சுதந்திரத்துக்கு முன்பு தேசப்பற்று முற்றி போய் மார்க்க அறிஞர்கள் 'ஆங்கிலம் படிப்பது ஹராம்: அரசு வேலைகளை உதறி விட்டு எல்லோரும் வெள்ளையனுக்கு எதிராக போராட்டத்தில் குதியுங்கள்' என்று தவறான ஃபத்வா(மார்க்க கட்டளை)வை கொடுத்தனர். அதை எங்களது முன்னோர்கள் கடை பிடித்ததனால் இன்று படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு அதிகம் பேர் வறுமையில் உள்ளனர். பிராமணர்களை போல் வெள்ளையர்களை எங்களது முன்னோர்கள் அனுசரித்து சென்றிருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமுதாயமாக இருந்திருப்போம். சுதந்திரத்துக்கு பிறகு கூட ராஜாஜி,பட்டேல் போன்றோர்களின் சூழ்ச்சிகளினால் இருந்த இட ஒதுக்கீடும் போனது.

குடுகுடுப்பை said...

ஒரு பகுத்தறிவாதி இப்படி பேசலாமா? அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதல்ல பிரச்னை. அந்த கல் வணங்குவதற்கு தகுதியானதுதானா என்றுதான் கேட்கிறேன்.//
நான் பகுத்தறிவுவாதி என்றும் எங்கும் சொல்வதில்லை. அடுத்தவன் விசயத்தில் தலையிடாத எதிலும் நாம் தலையிடமுடியாது. அந்தக்கல் எனக்கு வணங்க தகுதியானதல்ல, நீங்கள் வணங்கும் கடவுளும்தான், அதனை வணங்கக்கூடாது என்று நான் எப்படி சொல்லமுடியும்.

குடுகுடுப்பை said...

அடுத்து உலகம் எவ்வாறு உண்டானது என்று அறிவியல் பூர்வமாகவும், பகுத்தறிவிலும் விளக்கும்படி கேட்டிருந்தேன். அதைக் கண்டுக்கவே இல்லையே//
அதற்கெல்லாம் நான் நிறைய படிக்கவேண்டும் உங்களைப்போல் ஒரு மதப்புத்தகத்தை நம்பி நான் அறிவாளி என்று சொல்லிக்கொள்ளமுடியாது. உலகம் எப்படி உண்டானது என்று அறியமுற்படும் மனிதர்களை நான் நம்புகிறேன்.கண்டிப்பாக கடவுள் சொன்னதாக சொல்வதை அல்ல.

suvanappiriyan said...

திருச்சிக்காரரே!

//இஸ்லாத்தில் அடிமை முறையை அங்கீகரித்து உள்ளார்களா இல்லையா? போரிலே பிடிக்கப் படும் அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டுள்ளது என்று கூறப்படுவது உண்மையா இல்லையா? //

சோழர்கள் காலத்திலும் அடிமை முறை நம் நாட்டிலும் இருந்ததை மறந்து விட வேண்டாம். அதே போல் முகமது நபி காலத்துக்கு முன்பும் முகமது நபி காலத்திலும் அடிமை முறை மிகவும் அதிகமாக இருந்தது. ஆப்ரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வந்தவுடன் படிப்படியாக குறைந்து இன்று அடிமைகளே இல்லாத நிலையைத்தான் நாம் பார்க்கிறோம்.

உடல்நலக்குறைவால் நோன்பு வைக்க முடியவில்லையா? ஒரு அடிமையை விடுதலை செய்தால் சரியாகி விடும், இறைவன் மீது சத்தியம் செய்து விட்டு அதை மீறினால் அதற்கு பகரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும், என்று வரிசையாக சிறு பாவங்கள் செய்தவர்களை எல்லாம் அடிமைகளை விடுதலை செய்ய வைத்து தனது வாழ் நாளிலேயே அடிமைகளை முற்றிலுமாக ஒழித்தவர் முகமது நபி.

//அப்படி அடிமை ஆகி விட்டால் அதோ கதிதான் என்றுதான் சித்தூர் ராணி பத்மினி அலாவுதி கில்ஜி கோட்டையில் உள்ளே நுழையும் முன் நெருப்பில் விழுந்து இறந்து தன மாந்திக் காத்துக் கொண்டாள் என்று வரலாற்றில் உள்ளது உண்மையா இல்லையா?//

ஒரு நாட்டை இன்னொரு நாட்டுக்காரன் பிடிப்பதை இஸ்லாத்தோடு ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்? இதை விட மோசமாக சமணர்களை உங்கள் மதத்தவர் கொல்லவில்லையா? சேர சோழ பாண்டியர்கள் போரில் பெண்களை மானபங்கப்படுத்தவில்லையா? தன்னை கேலி செய்ததற்க்காக 1000 பெண்களை அசோகர் கழுவிலேற்றி கொல்லவில்லையா? அனைத்துக்கும் ஆதாரம் தரட்டுமா?

suvanappiriyan said...

//கிள்ளி வளவன் said...

அய்யர்வாள்,
மசூதிய இடிக்கனும்னா நாமெல்லாம் இந்துன்னு கூப்புடுறே, லட்டு புடிக்கமட்டும் நாங்க (பிராமிண்) மட்டும்தான் இந்துன்னு தனியாப் போறியே! ஏன்?//

வினவு பதிவில் வந்த பின்னூட்டத்தில் நான் ரசித்து சிந்தித்த பின்னூட்டம். :-)

vetri said...

Hi,

your blog is good n this is my first time visit to ur blog. The most good thing i have noticed here is the "respect" in words which usually gets missing in many of the blogs.But the Dose of Islamisim is too much, which makes me a stranger for a bit. But over all its good.

suvanappiriyan said...

Thanks for your comments Mr Vetri.