Followers

Wednesday, February 23, 2011

கலைஞரே! இது நியாயமா?


இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவை அனைத்தும் இலவச திட்டங்களால் வந்ததாக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அன்பழகனோ இலவச திட்டங்கள்தான் பலரின் வயிற்றைக் கழுவுகிறது. எனவே அதை குறை சொல்லாதீர்கள் என்கிறார். தமிழக அரசு போடும் இலவச திட்டங்களில் சத்துணவை தவிர மற்ற அனைத்து திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீர்தான். யாருக்கும் எந்த பயனையும் இந்த இலசவ திட்டங்கள் ஏற்ப்படுத்தப் போவதில்லை.

இலவச கலர் டிவி கொடுக்கச் சொல்லி யார் அழுதது? சினிமா நடிகர்களுக்கு இலவச மனைகளாம். கோடிகளில் புரண்டு கருப்புப் பணத்திலேயே வாழ்க்கையை ஓட்டி இளைய சமுதாயத்தை கெடுத்து தொலைக்கும் இந்த கூத்தாடிகளுக்கு ஏழைகளின் வரிப் பணத்தில் இலவச வீடு. இது நியாயமா கலைஞரே!

மணி மண்டபங்கள், பல தலைவர்களுக்கும் சிலைகள் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். இந்த மணிமண்டபங்களால் பொது மக்களுக்கு ஏதும் பயன் இருக்கிறதா? இதற்கு ஒதுக்கக் கூடிய பணத்தை கிராமங்கள் தோறும் குளங்களை தூர்வாரி வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேகரிக்கக் கூடாதா? ஒரு பகுத்தறிவாதி சிலைகளை திறக்கலாமா? அதற்கு சென்று மாலை போட்டால் அதற்கு விளங்குமா? பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு இன்று மஞ்சள் துண்டோடு வலம் வருகிறீர்களே! கலைஞரே இது நியாயமா?

எண்ணிக்கையிலேயே அடங்க முடியாத அளவுக்கு உங்கள் அமைச்சர் ராஜா ஊழல் பண்ணியது உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்குமா? 'நானும்,கண்ணதாசனும் ஆரம்ப காலங்களில் சென்னையில் சிங்கிள் டீயை பகுதியாக்கி குடிப்போம். அவ்வளவு வறுமை' என்று முன்பு எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆசியாவில் உள்ள பணக்காரர்களில் நீங்களும், உங்கள் குடும்பமும் வருகிறதே! அனைத்தும் கதை வசனம் எழுதிதான் வந்ததா! மெய்யாலுமா கலைஞரே!

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பசி தீரும்வரைதான் சாப்பிட முடியும். தூங்குவதற்கு ஆறடி இடம் போதும். உடுத்திக் கொள்ள வேட்டியும் சட்டையும் ஒருவனுக்கு ஐந்து ஆறு செட்கள் இருந்தாலே போதும். தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும். ரோட்டிலே கிடக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் எது தேவையோ அதுதான் உங்களுக்கும் தேவை. எனவே இத்தனை கோடிகளை வைத்துக் கொண்டு அதுவும் இந்த தள்ளாத வயதில் என்ன சுகத்தை அனுபவித்து விடப் போகிறீர்கள்? எனவே தேவைக்குப் போக பாக்கி சொத்துக்களை எல்லாம் அரசாங்கத்திடமே கொடுத்துடு ராசா! உங்கள் மேல் உள்ள பிரியத்தில்தான் சொல்கிறேன். சரி கொடுக்க மனது இல்லா விட்டாலும் இனிமேலாவது லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை வழங்க ஸ்டாலினுக்கு அறிவுரையாவது வழங்கக் கூடாதா? உங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அம்மாவை உட்கார வைக்கலாம் என்றால் அதுவோ மதம் முழுங்கி மகாதேவன். தமிழ்நாட்டையே வித்துட்டு அந்தம்மா கர்நாடகாவுல போய் உட்கார்ந்திரும். அந்தம்மா திரும்பவும் ஆட்சிக்கு வர நீங்களே வழி வகுக்கலாமா? இது நியாயமா கலைஞரே!

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று

போற்றினும் பொத்துப் படும்.

-திருக்குறள்

கலைஞரே! போதும் இலவச திட்டம்!

நாட்டுக்குத் தேவை நீண்ட கால திட்டம்!

அது இல்லையேல் தமிழர்கள் சேர்ந்து

கொடுப்பார்கள் உமக்கு திண்டாட்டம்!:-)


படிக்கும் காலங்களில் டி.ராஜேந்தர் படம் பார்த்ததின் பாதிப்பு.

மதம் சம்பந்தமாகவே பதிவுகள் தருகிறீர்களே! நாட்டு நடப்பையும் சேர்த்துக் கொள்ளக் கூடாதா என்று என் நண்பர் கேட்டார். அதன் விளைவு பிறந்தது சமூக அக்கறையுடன் ஒரு பதிவு.

7 comments:

Anisha Yunus said...

//இனிமேலாவது லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை வழங்க ஸ்டாலினுக்கு அறிவுரையாவது வழங்கக் கூடாதா? உங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அம்மாவை உட்கார வைக்கலாம் என்றால் அதுவோ மதம் முழுங்கி மகாதேவன். தமிழ்நாட்டையே வித்துட்டு அந்தம்மா கர்நாடகாவுல போய் உட்கார்ந்திரும். அந்தம்மா திரும்பவும் ஆட்சிக்கு வர நீங்களே வழி வகுக்கலாமா? இது நியாயமா கலைஞரே!//

ஹ ஹா.. ரசித்த வரிகள். எதிர் தரப்பினர் மட்டும் என்ன தமிழகத்தை வளம் கொழிக்கவா விடப்போகிறார்கள்? அவர்களால் முடிந்த அளவு அவர்களும் சுரண்டத்தான் போகிறார்கள். இதில் கருணானிதி என்ன, ஜெயலலிதா என்ன?..

suvanappiriyan said...

கலைஞர் போனால் அதற்கு அடுத்து யார் என்று பார்த்தால் நமக்கு ஜெயலலிதாதான் ஞாபகம் வருகிறார். அவர் வந்தால் கூடவே சசிகலாவின் அதிகாரமும் வரும். வருங்கால தமிழக அரசியலை நினைத்தால் தலை சுற்றுகிறது.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ..அன்னு.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நம் மீது உடனடியாக சாந்தி நிலவட்டுமாக...

இதென்ன...?

//இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது.//

மாநில அரசுகள் வேறு தனியாக கடன் வாங்குகிறதா?

அப்புறம் ஏற்கவனவே இந்தியா வாங்கின கடன் 1.23 லட்சம் கோடி வேறு உள்ளதே..?

இதேபோல மற்ற மாநிலங்கள் தனியாக வாங்கி இருக்குமே...?

ஆஹா.... அப்டீன்னா...
நான் இந்த ஆட்டத்துக்கு வரலை..!
என்னை விட்ருங்க....
என்னக்கேட்டுக்கிட்டாங்க வாங்கினாங்க இவங்க...? இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது சொல்லிட்டேன்... ஆமா!

உங்க கார்ட்டூன் நன்றாக உள்ளது சகோ.சுவனப்பிரியன். அதிலும் இரண்டாவது... உதய சூரியன் சின்னத்திலிருந்தே... டாப்!

suvanappiriyan said...

நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

சகோ. ஆஷிக்!

//என்னக்கேட்டுக்கிட்டாங்க வாங்கினாங்க இவங்க...? இதற்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியாது சொல்லிட்டேன்... ஆமா!//

உங்களை கேட்காமல் வாங்கினாலும் ஆட்டத்துக்கு அனைவரையும் அவசியம் சேர்த்துக் கொள்வார்கள். ஏனெனில் வட்டி கட்ட வேண்டுமே!:-(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7. காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. <===

..

suvanappiriyan said...

நண்பர் அருள்!

டோண்டு உங்கள் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். என் பார்வையில் ஒரு சிறந்த நண்பர். சென்னையில் அவரை சந்தித்தபோது என்னுடன் மிகவும் நட்புடனேயே பழகினார் அந்த நட்பு இன்று வரை தொடர்கிறது. இதனால் சாதி சம்பந்தமாக அவர் கொண்டிருக்கும் கொள்கையை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர் கொள்கை அவருக்கு என் கொள்கை எனக்கு.

suvanappiriyan said...

//சுட்டியை சொடுக்கி படிக்கவும்.//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி தமிழன்!